உலக செய்திகள்

மிக அதிக அளவில் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்தினால் மனச்சோர்வு வரும்

‘ஸ்மார்ட் போன்’ உபயோகிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

தற்போதைய நிலவரப்படி நமது நாட்டில் 53 கோடிப்பேர் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் ஸ்மார்ட் போன் பயன்பாடு தொடர்பாக அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழகத்தின் 135 மாணவர்களிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

அந்த பல்கலைக்கழகத்தின் சுகாதார கல்வி பேராசிரியர் எரிக் பெப்பர், இணை பேராசிரியர் ரிச்சர்டு ஹார்வி நடத்திய இந்த ஆராய்ச்சியில், மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிற மாணவர்கள் தனிமை உணர்வுக்கும், மனச்சோர்வுக்கும், பதற்றத்துக்கும் ஆளாவது தெரிய வந்து உள்ளது.

வலி தாங்க முடியாமல் வலி நிவாரணிகளை எடுத்து, அதற்கு அடிமையாகி விடுவதுபோல, ஒரு கட்டத்தில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் அதற்கு அடிமையாகி விடுவதாக இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் தனிமை உணர்வுக்கு தள்ளப்படுவதற்கு காரணம், அவர்கள் சக மனிதர்களிடம் முகம் பார்த்து பேசாமல் போய்விடுவதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்