உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலர்கள் கடன் உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்

பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானுக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடன் உதவி- சர்வதேச நாணய நிதியம் வழங்குகிறது 13 ஜூலை 2023 1:17 PM முதல் கட்டமாக 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.9,800 கோடி) வழங்கப்பட உள்ளது. நடுத்தர கால பொருளாதார சவால்களை உடனடியாக சமாளிக்க உதவும். மேலும் படிக்க

பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) கடன் உதவி வழங்கும்படி பாகிஸ்தான் அரசு கேரிக்கை விடுத்தது. கடன் வழங்க ஐ.எம்.எப். பல்வேறு நிபந்தனைகளை விதித்ததையடுத்து இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.24 ஆயிரம் கோடி) கடன் உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. முதல் கட்டமாக 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.9,800 கோடி) வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள தொகை அடுத்த 9 மாதங்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து