கோப்புப்படம் 
உலக செய்திகள்

இலங்கை அதிபருடன் சர்வதேச நிதிய குழுவினர் சந்திப்பு

சர்வதேச நிதிய குழுவினர் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேயை நேற்று சந்தித்தனர்.

தினத்தந்தி

கொழும்பு,

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, அதிலிருந்து மீள சர்வதேச நிதியத்தின் உதவியை எதிர்பார்க்கிறது. அதனிடம் இருந்து 500 கோடி அமெரிக்க டாலர்கள் கிடைத்தால்தான் நெருக்கடியில் இருந்து விடுபட முடியும் என்று அந்நாடு எண்ணுகிறது.

இந்நிலையில் இலங்கை வந்துள்ள சர்வதேச நிதியத்தின் குழுவினர் அதிபர் ரணில் விக்ரமசிங்கேயை நேற்று சந்தித்துப் பேசினர். இந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து அலசப்பட்டதாக அதிபர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தொடங்கும் 2-வது சுற்று பேச்சுவார்த்தையில் இலங்கையின் மத்திய வங்கி கவர்னர் நந்தலால் வீரசிங்கே பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்