உலக செய்திகள்

காஷ்மீர் நெருக்கடியை தீர்க்க ஒரு வாரத்தில் திட்டம் பாகிஸ்தான் அமைச்சர் சொல்கிறார்

காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு முன்மொழிவை தற்போதைய அரசாங்கம் தயாரித்து வருவதாக பாகிஸ்தான் அமைச்சர் கூறி உள்ளார்.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்

பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைச்சர் ஷிரீன் மசாரி கூறுகையில், காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு முன்மொழிவை தற்போதைய அரசாங்கம் தயாரித்து வருவதாக கூறி உள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் நாசிம் ஜெஹ்ராவால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் ஷிரீன் மசாரி கூறி இருப்பதாவது:-

பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் (PTI) அரசு காஷ்மீர் பிரச்சினையை ஒரு வாரத்திற்குள் தீர்த்து வைப்பதற்கும் அது அமைச்சரவையில் முன்வைப்பதற்கும் ஒரு திட்டத்தை தயார் செய்யும். மற்ற சம்பந்தபட்டவர்களுடனும் இந்த விவகாரத்தை விவாதிக்கப்படும்."இந்த திட்டம் கிட்டத்தட்ட தயாராக உள்ளது மற்றும் அது விரைவில் கொண்டுவரப்படும் என்று நம்புகிறேன்."

கடந்த ஜூலை 25 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவரது முதல் உரையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுடன் நல்ல உறவு வைத்திருக்க விரும்புவதாகவும், பேச்சுவார்த்தை மூலம் அனைத்து முக்கிய பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும் என்றும் காஷ்மீர் இரு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாட்டின் மையப் பிரசினையாகக் கருதி இரு நாடுகளும் உட்கார்ந்து கவலை கொண்ட விவகாரங்களைப் பற்றி விவாதித்து கொள்ளவேண்டும் என்றும் அவர் பேசி இருந்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு