உலக செய்திகள்

இம்ரான்கான் சென்ற விமானத்தில் கோளாறு: மீண்டும் நியூயார்க் திரும்பினார்

இம்ரான்கான் சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் நியூயார்க் நகரத்திற்கே திரும்பினார்.

தினத்தந்தி

நியூயார்க்,

ஐநா பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஐநா கூட்டத்துக்கு பிறகு தனது நாட்டிற்கு திரும்பினார். ஆனால் அவரது பயணம் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபிய இளவரசரின் சொந்த விமானத்தில், இம்ரான்கான் அமெரிக்கா வருகை தந்திருந்தார்.

அதே விமானத்தில் இம்ரான்கான் மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பினார். ஆனால், சில மணி நேரங்களிலேயே இம்ரான்கான் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் நியூயார்க் கென்னடி விமான நிலையத்திற்கே திரும்பியது. தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலை சரிசெய்ய முயன்றனர். ஆனால், அதை சீர் செய்ய கூடுதல் நேரம் தேவைப்பட்டது. இதையடுத்து தங்கியிருந்த ஹோட்டலுக்கே இம்ரான்கான் திரும்பினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை