உலக செய்திகள்

கடைசி பந்துவரை அடித்து ஆடுவார்; இம்ரான்கான் ராஜினாமா இல்லை-பவாத் சவுத்ரி

இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை ராஜினமா செய்ய்யமாட்டார் என தகவல் துறை மந்திரி பவாத் சவுத்ரி கூறி உள்ளார்.

இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது நாளை(வியாழக்கிழமை) விவாதம் நடக்கிறது. அதை தொடர்ந்து 3-ந் தேதி ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக எதிர்க்கட்சிகளுக்கு தனது பலத்தை காட்டும் விதமாக கடந்த 27-ந்தே தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் இம்ரான்கான் பிரமாண்ட பேரணியை நடத்தினார். பேரணியில் பேசிய இம்ரான்கான் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் தங்களுக்கு இருக்கும் ஆதரவை காட்டும் விதமாக நேற்று இஸ்லாமாபாத்தில் பிரமாண்ட பேரணியை நடத்தினர். இந்த பேரணியில் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு இம்ரான்கான் மற்றும் அவரது அரசை குற்றம் சாட்டி கடுமையாக பேசினர்.

இந்தநிலையில், இம்ரான்கான் அரசுக்கு ஆதரவளித்து வந்த எம். கி.எம் கட்சி ஆதரவை விலக்கி கொண்டுள்ளது. எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக எம். கி.எம் கட்சி அறிவித்துள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானில் பெரும்பான்மையை இழந்தது இம்ரான்கானின் அரசு. நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பே இம்ரான்கான் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பெரும்பான்மையை இழந்துள்ளதால் இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இன்று ராஜினமா செய்வார் என்று கூறப்பட்டது.

ஆனால் இது குறித்து டுவிட் செய்து உள்ள பாகிஸ்தான் தகவல் துறை மந்திரி பவாத் சவுத்ரி இம்ரான்கான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யமாட்டார். பிரதமர் இம்ரான் கான் கடைசி பந்து வரை போராடும் வீரர். அவருக்கு ராஜினாமா செய்யமாட்டார் என கூறி உள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்