உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அதிரடி தாக்குதல் - 72 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தாக்குதலில், 72 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

கஜினி,

ஆப்கானிஸ்தானின் கஜினி மாகாணத்தில், நவா, கிலான், கோக்யானி மாவட்டங்களில் பதுங்கியுள்ள தலீபான் பயங்கரவாதிகளை குறிவைத்து உள்நாட்டுப்படைகளும், அமெரிக்க கூட்டுப்படைகளும் அதிரடி தாக்குதல்கள் நடத்தின.

இந்த தாக்குதல்கள், தலீபான் பயங்கரவாதிகளுக்கு பலத்த அடியாக அமைந்தது.

நவா மாவட்டத்தில் 20 பேர், கிலான் மாவட்டத்தில் 40 பேர், கோக்யானி மாவட்டத்தில் 12 பேர் என மொத்தம் 72 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். தலீபான் பயங்கரவாதிகளின் 3 கனரக வாகனங்கள், 5 மோட்டார் சைக்கிள்கள், ஏராளமான ஆயுதங்கள் அழிக்கப்பட்டன.

தங்கள் மீது வான்தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒப்புக்கொண்டுள்ள தலீபான் பயங்கரவாதிகள், 9 பேர் மட்டுமே பலியானதாக தெரிவித்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு