உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரம் போலீஸ் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் 8 போலீசார் பலி

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த தலீபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுடன் அமெரிக்க அரசு மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை.

காபூல்,

எனவே இலக்கை அடையும் வரை போர் நிறுத்தத்துக்கு வாய்ப்பு இல்லை என தலீபான்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் பயங்கரவாத தாக்குதல்கள் தீவிரமடைய தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கஜினி மாகாணத்தின் தலைநகர் கஜினியில் உள்ள மத்திய ரிசர்வ் படை போலீஸ் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். கடத்தப்பட்ட ராணுவ வாகனத்தில் வெடிகுண்டுகளை நிரப்பி, அதனை ஓட்டி வந்து, போலீஸ் நிலையத்தின் மீது மோதி வெடிக்க செய்தனர். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் போலீஸ் நிலைய கட்டிடம் பலத்த சேதம் அடைந்தது.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தலைநகர் காபூலில் பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்சில் திடீரென குண்டுவெடித்தது. அதனை தொடர்ந்து அங்கு அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இதில் ஒருவர் பலியானார். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு