உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதலில் 8 போலீசார் பலி

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவர்களின் கொட்டத்தை ஒடுக்க ஆப்கான் வீரர்களும், அமெரிக்க படை வீரர்ளும் போராடி வருகின்றனர்.

காபூல்,

இந்த நிலையில், நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பக்லான் மற்றும் சமங்கன் மாகாணங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் இரவு திடீர் தாக்குதல் நடத்தினர்.

துப்பாக்கிகளால் சுட்டும், ராக்கெட் வீசியும் நடத்திய தாக்குதலில் போலீசார் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அதே சமயம் போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் பலர் பலியானதாக தெரிகிறது. எனினும் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என உறுதியான தகவல்கள் இல்லை. மேலும் பயங்கரவாதிகள் சிலர் போலீஸ் சோதனை சாவடியில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு