காபூல்,
இந்த நிலையில் அந்த நாட்டின் கிழக்கு மாகாணமான நங்கர்ஹாரில் உள்ள பலீல் கெல் பகுதியில், பயங்கரவாதிகள் முகாமை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலால் தலீபான்கள் நிலைகுலைந்தனர். அவர்களில் 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், 8 பேர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் தலீபான்கள் பயன்படுத்திய ஆயுதக்கிடங்கு அழிக்கப்பட்டது. அங்கிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிபொருட்கள், 2 மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.