பிரேசிலியா,
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக பிரேசில் உள்ளது. இங்கு கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது.
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 46,305 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 30,13,369 ஆக உயர்ந்துள்ளதாக பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த நாட்டில் ஒரே நாளில் 841 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 1,00,543 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 20,94,293 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 8,23,326 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.
உலகளவில் கொரோனாவால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 51,66,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.