உலக செய்திகள்

பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66,093 ஆக உயர்வு

பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 66,093 ஆக உயர்ந்துள்ளது.

பிரேசிலியா,

அமெரிக்காதான் உலகிலேயே கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அதிகபட்ச பாதிப்பை சந்தித்துள்ள நாடாக விளங்கி வருகிறது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசிலில் மின்னல் வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் மத்தியில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் அங்கு புதிதாக 17,468 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரேசிலில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 16,43,539 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 537 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 66,093 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 10,72,229 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (30,57,011 பேர்), மூன்றாவது இடத்தில் இந்தியாவும்(7,39,646 பேர்), நான்காவது இடத்தில் ரஷ்யாவும் (6,94,230 பேர்) உள்ளன.

இதனிடையே பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உடல் நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு