உலக செய்திகள்

சூடான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது 3 பேர் பலி

சூடான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 3 பேர் பலியாயினர்.

தினத்தந்தி

மாஸ்கோ,

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று, சூடானில் ஐ.நா. அமைதிப்படையில் அங்கம் வகித்து செயல்பட்டுக்கொண்டிருந்தது.

இந்த ஹெலிகாப்டர் 23 பேருடன் சூடான் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கடுக்லி நகரத்தில் இருந்து எல்லையோரம் உள்ள அப்யெய் பகுதிக்கு நேற்று சென்று கொண்டிருந்தது.

இந்த ஹெலிகாப்டர், ஐ.நா. இடைக்கால பாதுகாப்பு படை வளாகத்தினுள் நேற்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் அந்த ஹெலிகாப்டரின் 3 ஊழியர்கள் பலியாகினர். 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களில் 3 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதை ஐ.நா. இடைக்கால பாதுகாப்பு படை, ஒரு அறிக்கையில் உறுதி செய்துள்ளது. இந்த விபத்துக்கு என்ன காரணம் என்பது உடனடியாக தெரியவில்லை. இது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்