உலக செய்திகள்

ஆப்பிரிக்க நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து 30 பேர் பலி

ஆப்பிரிக்க நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 30 பேர் பலியாயினர்.

தினத்தந்தி

கின்ஷாசா,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஹவுத் ஊலே மாகாணத்தின் தலைநகர் இசிரோவில் தங்க சுரங்கம் உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இசிரோவில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக தங்க சுரங்கம் அமைந்துள்ள பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்தது.

அப்போது சுரங்கத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. எனினும் 30 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.

மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை