உலக செய்திகள்

நெதர்லாந்தில் கடந்த வாரத்தில் 50 சதவீதம் ஒமைக்ரான் பாதிப்புகள் உறுதி

நெதர்லாந்து நாட்டில் கடந்த வாரத்தில் 50 சதவீதம் ஒமைக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

தினத்தந்தி

தி ஹேக்,

நெதர்லாந்தில் கொரோனாவின் புதிய வகை ஒமைக்ரான் பாதிப்புகள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன. அந்நாட்டில் டெல்டா வைரசுக்கு பதிலாக கடந்த வாரத்தில் 50 சதவீதம் ஒமைக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன என அந்நாட்டு தேசிய பொது சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

ஒமைக்ரான் பாதிப்புகள் அதிவிரைவாக பரவி வருவதுடன், கூடுதல் பாதிப்புகள் வருங்காலத்தில் ஏற்பட கூடும் என்றும், இதனால் மருத்துவமனையில் நோயாளிகள் சேருவதும் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில், கடந்த 19ந்தேதி ஊரடங்கு உத்தரவையும் டச்சு அரசு பிறப்பித்து இருந்தது. அத்தியாவசிய கடைகள் தவிர, பிற கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. பொதுமுடக்கம் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி ஆகியவற்றால் நாட்டின் சுகாதாரநலம் பாதுகாக்கப்படும் என்று அரசு நம்பிக்கை கொண்டுள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு