உலக செய்திகள்

அமெரிக்காவில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்து 4 பேர் பலி

அமெரிக்காவில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலியாயினர்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் சியாட்டில் நகரில் உள்ள மெர்கர் என்ற இடத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணியில் ராட்சத கிரேன் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல பணிகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென அந்த ராட்சத கிரேன் சரிந்து சாலையில் விழுந்தது. இதில், சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் மீது, ராட்சத கிரேனின் ஒரு பகுதி விழுந்து, கார்கள் சின்னாபின்னமாகின.

இந்த கோர விபத்தில், ராட்சத கிரேனை இயக்கிய 2 டிரைவர்களும், வெவ்வேறு கார்களில் இருந்த 2 நபர்கள் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் மற்ற கார்களில் இருந்த ஒரு பெண் மற்றும் அவரது குழந்தை உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்கள். கிரேன் சரிந்து விழுந்ததில் மொத்தம் 6 கார்களும், கட்டுமான பணிகள் நடந்து வரும் கட்டிடத்தின் ஒரு பகுதியும் பலத்த சேதம் அடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்