உலக செய்திகள்

அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 2 லாட்டரிகளில் ரூ.4¼ கோடி பரிசு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ரோசா டோமின்கியூ (வயது 19).

வாஷிங்டன்,

இவர் கடந்த வாரம் அரிசோனா மாகாணத்தில் உள்ள ஒரு லாட்டரி கடையில் தனது அதிர்ஷ்டத்தை சோதித்து பார்க்க 5 டாலர் மதிப்புள்ள லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கினார். இதற்கான பரிசுத்தொகை 5 லட்சத்து 55 ஆயிரம் டாலர் ஆகும்.

அதன்பின்னர் 2 நாள் இடைவெளியில் கலிபோர்னியாவின் கேஸ் ஸ்டேஷன் பகுதியில் மீண்டும் ஒரு லாட்டரி சீட்டை வாங்கினார். இதனுடைய பரிசுத்தொகை 1 லட்சம் டாலர்.

இந்த நிலையில் அவர் வாங்கிய 2 லாட்டரி சீட்டுகளுக்கும் அவருக்கு பரிசு கிடைத்தது. இதன் மூலம் அவர் 6 லட்சத்து 55 ஆயிரம் டாலருக்கு சொந்தக்காரர் ஆனார். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் ரூ.4 கோடியே 25 லட்சத்து 75 ஆயிரம் ஆகும்.

ஒரே வாரத்தில் 2 லாட்டரி சீட்டுகளில் பரிசு பெற்றதன் மூலம் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ரோசா டோமின்கியூ தனக்கு கிடைத்திருக்கும் பணத்தை கொண்டு தான் மிகவும் விரும்பும் கார் ஒன்றை வாங்க முடிவு செய்து உள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்