உலக செய்திகள்

ஐ.எஸ். பயங்கரவாதிகள் 29 பேர் கைது

துருக்கியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 29 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

இஸ்தான்புல்,

துருக்கியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் 31ந் தேதி இரவு புத்தாண்டை வரவேற்பதற்காக தலைநகர் இஸ்தான்புலில் உள்ள இரவுநேர கேளிக்கை விடுதியில் திரண்டிருந்தவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உள்பட 39 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வரவிருக்கும் புத்தாண்டையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயங்கரவாதிகளை வேட்டையாடும் வகையில் பயங்கரவாத தடுப்பு படையினர் நாடு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று தலைநகர் இஸ்தான்புலில் உள்ள பல்வேறு இடங்களில் பயங்கரவாத தடுப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இதன் பயனாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் 29 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் வெளிநாட்டினர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு