லாஹூர்,
பாகிஸ்தானில் வருகிற ஜூலை 25ந்தேதி நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரங்களில் பல்வேறு அரசியல் கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பைசலாபாத்தில் உள்ள என்.ஏ.-103 மற்றும் பி.பி.-103 ஆகிய தொகுதிகளில் லாரி சின்னத்தில் மிர்சா முகமது அகமது முகல் என்பவர் சுயேட்சை வேட்பாளராக நின்றுள்ளார்.
முகமது தனது மகன்களிடம் ஏற்பட்ட தகராறினால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் போட்டியிடும் இரு தொகுதிகளுக்கான தேர்தலை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது.