உலக செய்திகள்

இந்தியா, சீனா எங்களை புறக்கணிக்கிறது அவற்றை வளரும் நாடுகளாக நாங்கள் கருதவில்லை -டொனால்ட் டிரம்ப்

இந்தியா, சீனா எங்களை புறக்கணிக்கிறது அவற்றை வளரும் நாடுகளாக நாங்கள் கருதவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:-

உலக வர்த்தக அமைப்பின் கூற்றை இருவரும் "சாதகமாக" பயன்படுத்திக் கொண்டிருப்பதால் இந்தியாவும் சீனாவும் இனி "வளரும் நாடுகள்" அல்ல.

உலக வர்த்தக அமைப்பு ஒரு உண்மையான அமைப்புதானா... இந்தியா மற்றும் சீனாவை வளரும் நாடுகளாக கருத வேண்டாம் என்று வலியுறுத்தி எனது நிர்வாகம் உலக வர்த்தக அமைப்புக்கு (WTO) ஒரு கடிதம் எழுதியுள்ளது.

அவர்கள் சீனாவை வளரும் நாடாக கருதுகிறார்கள். இந்தியாவை ஒரு வளரும் தேசமாக நாங்கள் கருதவில்லை, ஏனென்றால் அவர்கள் எங்களைத் புறக்கணிக்கிறார்கள் என கூறினார்.

அமெரிக்காவும் சீனாவும் தற்போது வர்த்தக போரில் ஈடுபட்டுள்ள நிலையில் டிரம்பின் இந்த அறிக்கை வந்துள்ளது. அமெரிக்க தயாரிப்புகளுக்கு "மிக உயர்ந்த" வரிகளை விதித்ததற்காக டிரம்ப் இந்தியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்தியாவை "வரி ராஜா " என்று வர்ணித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...