உலக செய்திகள்

மாலத்தீவில் அவசரகால நிலை அறிவிப்பு; குடிமக்கள் பயணங்களை தவிர்க்கும்படி இந்தியா வேண்டுகோள்

மாலத்தீவில் நிலவும் அரசியல் குழப்பம் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு சூழல் ஆகியவற்றால் தேவையற்ற பயணங்களை குடிமக்கள் தவிர்க்கும்படி இந்தியா கேட்டு கொண்டுள்ளது.

புதுடெல்லி,

அரசியல் குழப்பம் நீடிக்கும் மாலத்தீவில் 15 நாட்களுக்கு அவசரகால நிலையை அதிபர் அப்துல்லா யாமீன் இன்று அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்திய வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில், மாலத்தீவில் நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு சூழல் இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அடுத்த அறிவிப்பு வரும்வரை இந்திய குடிமக்கள் மாலத்தீவுக்கு மேற்கொள்ளும் தேவையற்ற பயணங்களை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசியல் கைதிகளை விடுவிக்கும்படி கூறிய சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ஏற்க மறுத்த யாமீன் அவசரகால நிலை அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதனால் சந்தேகப்படுபவர்களை பிடித்து, கைது செய்வதற்கு பாதுகாப்பு படைகளுக்கு முழுமையாக அதிகாரம் வழங்கப்பட்டு விடும்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்