வாஷிங்டன்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. தலைமையகத்தில், 73-வது பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்க உள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொள்கிறார்.
இரண்டு வாரம் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டம் செப்டம்பர் 25 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றுள்ளார்.
இதனிடையே நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் ப்ரதீப் குமார் க்யாவாலியுடன், சுஷ்மா ஸ்வராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்படிக்கைகளின் படி மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை துரிதப்படுத்துவது குறித்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் சங்கர் தாஸ் பைராஹி தெரிவித்தார். மேலும் இந்த சந்திப்பில் வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் மூத்த அரசாங்க அதிகாரிகள் கலந்து கொண்டனர்.