உலக செய்திகள்

இங்கிலாந்தின் பயண தடை பட்டியலில் இந்தியா

உருமாறிய கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு இந்தியாவை பயண தடைக்கான சிவப்பு பட்டியலில் இங்கிலாந்து சேர்த்துள்ளது.

தினத்தந்தி

லண்டன்,

இங்கிலாந்து நாட்டில் 43.9 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1.27 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா பாதிப்புகளும் கண்டறியப்பட்டன. இதனால், கடந்த டிசம்பர் இறுதியில் இந்தியா உள்பட பல நாடுகள் அந்நாட்டுடனான விமான சேவையை தற்காலிக ரத்து செய்தன.

இந்நிலையில், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட 30 நாடுகளில் இங்கிலாந்தின் உருமாறிய கொரோனா வைரசானது இருப்பது உறுதியானது. இதனால் அந்நாடுகளை சேர்ந்த மக்களுக்கு இங்கிலாந்தில் நுழைய தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 2ந்தேதி பாகிஸ்தான், கென்யா, பிலிப்பைன்ஸ் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளை இங்கிலாந்து நாடு சிவப்பு பட்டியலில் சேர்த்தது. இந்த பயண தடையானது, கடந்த 9ந்தேதி காலையில் இருந்து அமலுக்கு வந்தது.

இதன்படி, இந்த நாடுகளில் இருந்து இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாட்டு மக்களை தவிர்த்து பிறர் வருவதற்கு தடை விதிக்கப்படும். எனினும், அந்த நாடுகளில் இருந்து வருகிற இங்கிலாந்து மக்கள் 10 நாட்கள் கட்டாயம் ஓட்டல்களில் தங்கியிருக்க வேண்டும் என்றும் உத்தரவு வெளியிடப்பட்டது.

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பாதிப்புகள் இந்தியாவிலும் சிலரிடம் உறுதி செய்யப்பட்டன. இதுவரை 103 பேருக்கு இந்த வகை கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனை முன்னிட்டு இந்தியாவை பயண தடைக்கான சிவப்பு பட்டியலில் இங்கிலாந்து நாடு சேர்த்துள்ளது என அந்நாட்டு சுகாதார மந்திரி மேட் ஹேன்காக் இன்று தெரிவித்து உள்ளார்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்