உலக செய்திகள்

அமெரிக்காவின் அதிருப்தியை மீறி ரஷியாவுடன் கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா பங்கேற்பு

ரஷ்யாவில் நடைபெறும் கூட்டு பயிற்சியில் கோர்க்கா ரைஃபிள்ஸ் படையை சேர்ந்த இந்திய ராணுவக் குழுவினர் பங்கேற்றுள்ளனர்.

தினத்தந்தி

மாஸ்கோ,

'வோஸ்டாக் - 2022' எனப்படும் பல்முனை ராணுவ உக்தி மற்றும் செயல்திறன் பயிற்சி, ரஷ்யாவின் கிழக்கு ராணுவ மாவட்ட செர்ஜியேவ்ஸ்கி பயிற்சி மைதானத்தில் நேற்று தொடங்கியுள்ளது. இந்த பயிற்சி முகாம் வரும் 7-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இந்த ராணுவ பயிற்சியில் கோர்க்கா ரைஃபிள்ஸ் படையை சேர்ந்த இந்திய ராணுவக் குழுவினர் பங்கேற்றுள்ளனர். 7 நாட்களில் கூட்டு களப்பயிற்சிகள், போர் விவாதங்கள் மற்றும் வீர, தீர பயிற்சிகளில் இந்திய ராணுவ குழுவினர் ஈடுபடுகின்றனர்.

இந்த பயிற்சி பிற ராணுவக் குழுக்கள், பார்வையாளர்களிடையே தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. ராணுவ செயல்முறைகளை நடைமுறைப்படுத்துதல், புதிய தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்டவற்றை குறித்து பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

அதே சமயம் ரஷியாவுடன் இணைந்து இந்திய ராணுவம் கூட்டுப் பயிற்சி மேற்கொள்வது குறித்து அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரின் ஜீன் பியர் கூறுகையில், "உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மிருகத்தனமான போரை நடத்தும் அதே வேளையில், ரஷ்யாவுடன் எந்த நாடும் பயிற்சி மேற்கொள்வது குறித்து அமெரிக்கா கவலை கொள்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்