உலக செய்திகள்

இந்தியா என்எஸ்ஜியில் உறுப்பினர் ஆவது மிகவும் சிக்கலாகி உள்ளது சீனா சொல்கிறது

இந்தியா என்எஸ்ஜியில் உறுப்பினர் ஆகும் நகர்வு மிகவும் சிக்கலாகி உள்ளது என சீனா கூறிஉள்ளது.

தினத்தந்தி

பெய்ஜிங்,

48 உறுப்பு நாடுகள் கொண்ட என்.எஸ்.ஜி. கூட்டமைப்பில் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தால் கூட புதிதாக விண்ணப்பிப்பவர்கள் உறுப்பினராக முடியாது. கடந்த வருடம் ஜூன் மாதம் அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (என்எஸ்ஜி) இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பது தொடர்பாக சியோலில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்திலும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இந்தியா போன்ற அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளை அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (என்எஸ்ஜி) சேர்க்கக்கூடாது என சீனா தடுத்துவிட்டது.

இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு விலக்கு அளித்து உறுப்பினராக சேர்த்தால் பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டும் என்றும் சீனா பிடிவாதம் காட்டியது. சீனாவின் இந்த நிலைப்பாட்டுக்கு மேலும் 10 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் காரணமாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்தும் இந்தியாவுக்கு பலனில்லாமல் போய்விட்டது.

இந்தியாவின் செயல்பாட்டை கருத்தில் கொண்டு அமெரிக்கா உள்பட பிற அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பு (என்எஸ்ஜி) நாடுகளும் ஆதரவை தெரிவித்து வருகிறது.

அணு சக்தி விநியோக கூட்டமைப்பு (என்எஸ்ஜி) நாடுகளின் கூட்டம் ஸ்விட்சர்லாந்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அப்போது என்எஸ்ஜி-யில் இந்தியா இணைய வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் சீனாவின் எதிர்ப்பினால் மீண்டும் வாய்ப்பு மங்கி உள்ளது என்றே கூறலாம். அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகள் அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இணைவது தொடர்பான விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என சீனா கூறி உள்ளது.

இப்போது என்எஸ்ஜியில் உறுப்பினராகும் விவகாரம் புதிய சூழ்நிலையில் உள்ளது, முன்னர் நினைத்ததைவிட மிகவும் சிக்கலாகி உள்ளது என சீனா கூறிஉள்ளது. இவ்விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்காத சீனா, இந்தியாவிற்கு கொடுத்தால் பாகிஸ்தானுக்கும் கொடுக்கவேண்டும் என்ற ஆட்டம் காட்டி வருகிறது. பாகிஸ்தானை இவ்வரிசையில் பிற நாடுகள் யோசிக்ககூடவில்லை.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை