உலக செய்திகள்

ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவால் ஒருபோதும் மீட்க முடியாது: பாக்.புதிய ராணுவ தளபதி சொல்கிறார்

இந்தியா போர் தொடுத்தால் அதை எதிர்கொள்ளவும் பதில் தாக்குதல் நடத்தவும் பாகிஸ்தான் ராணுவம் தயராக உள்ளது என்று பாகிஸ்தானின் ராணுவ தளபதி கூறினார்.

இஸ்லமபாத்,

பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக கடந்த மாதம் 24 ஆம் தேதி அசிம் முனீர் பொறுப்பேற்றார். ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற பிறகு சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குச் சென்று அங்குள்ள ராணுவ வீரர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர் பேசிய அசிம் முனீர் கூறியதாவது:"கில்ஜித் பல்திஸ்தான், ஜம்மு, காஷ்மீர் குறித்து இந்தியா பொறுப்பற்ற கருத்துகளை தெரிவித்து வருகிறது. நம் தாய் நிலத்தில் ஒரு அங்குலத்தைக் கூட இந்தியா அபகரிக்க முடியாது. இந்தியா போர் தொடுத்தால் அதை எதிர்கொள்ளவும் பதில் தாக்குதல் நடத்தவும் பாகிஸ்தான் ராணுவம் தயராக உள்ளது" என்றார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்