உலக செய்திகள்

பாகிஸ்தானில் சார்க் மாநாடு; இந்தியா மாநாட்டில் கலந்துக்கொள்ளாது -சுஷ்மா சுவராஜ்

பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் இந்தியா கலந்துக்கொள்ளாது என சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

இஸ்லாமாபாத்,

சார்க் மாநாட்டை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு உறுப்பு நாடு பொறுப்பேற்று நடத்தும். அதன்படி இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் கூறினார்.

கடைசியாக 2014ம் ஆண்டு காத்மாண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் மோடி பங்கேற்றார். 2016ம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மாநாடு நடைபெற இருந்தது. அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உரியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இந்தியா மாநாட்டில் பங்கேற்க முடியாத நிலையை விளக்கியது. வங்காளதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் பங்கேற்க மறுத்துவிட்டதால் சார்க் மாநாடு நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் இந்தியா கலந்துக்கொள்ளாது என சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

சார்க் மாநாட்டில் கலந்துக்கொள்ளும்படி விடுத்த பாகிஸ்தானின் அழைப்புக்கு சாதகமான பதிலை அளிக்கவில்லை. பாகிஸ்தான் இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ளாத நிலையில் நேர்மறையான பதிலை கொடுக்கவில்லை. பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு கிடையாது. எனவே சார்க் மாநாட்டில் கலந்துக்கொள்ளப்போவது கிடையாது என கூறியுள்ளார் சுஷ்மா சுவராஜ்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்