உலக செய்திகள்

இந்தியா-மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு

மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

மாலே,

மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ் விடுத்த அழைப்பை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக நேற்று மாலத்தீவு சென்றார். விமானம் மூலம் மாலத்தீவு தலைநகர் மாலே சென்றடைந்த ஜெய்சங்கரை அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி அப்துல்லா சாகித், வெளியுறவு இணை மந்திரி அகமது கலீல் ஆகியோர் நேரில் வரவேற்றனர்.

மாலத்தீவில் இந்தியாவின் மானிய உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சில திட்டங்களை ஜெய்சங்கர் தொடங்கி வைப்பார் என்றும் இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா சாகித் மற்றும் இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பு குறித்து பேசிய ஜெய்சங்கர், கொரோனா காலத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பை பாரட்டிற்குரியது என்றும் தொற்றுநோய்க்கு பிந்தைய பொருளாதார மீட்சி குறித்து பேசியதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து அப்துல்லா சாகித் தனது டுவிட்டர் பக்கத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருடன் ஒரு பயனுள்ள சந்திப்பு நடைபெற்றது. இன்று விவாதிக்கப்பட்ட பல விவகாரங்களில் இந்தியாவின் நிதி உதவி, கொரோனா தொற்றுநோய் மற்றும் மீட்பு, தூதரக விஷயங்கள் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து பேசப்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்