வாஷிங்டன்,
ராஜா கிருஷ்ணமூர்த்தி ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் ஆவார். இல்லினாய்ஸ் மாகாணத்தின் 8வது நாடாளுமன்ற மாவட்ட தொகுதியில் இருந்து இவர் தேர்வு பெற்றவர்.
இவர் உளவுத்துறைக்கான நாடாளுமன்ற குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஒருவர் இந்த செல்வாக்கு மிகுந்த பதவிக்கு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நியமனம் குறித்து ராஜா கிருஷ்ணமூர்த்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.