உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் கடத்தி கொலை

அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் கடத்தி கொல்லப்பட்டார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவில் உள்ள போஷ் கலிபோர்னியாவை சேர்ந்தவர் துஷார் அட்ரே (வயது 50). இந்திய வம்சாவளியை சேர்ந்த கோடீஸ்வரரான இவர் ஆன்லைன் மார்க்கெட்டிங் கம்பெனி நடத்திவந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இவர் வீட்டில் மேலும் சிலருடன் இருந்தார். அப்போது சந்தேகப்படும் நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த அவரது தோழியின் காரில் அவரை கடத்திச் சென்றனர். இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் அவரை தேடிவந்தனர்.

சில மணி நேரத்தில் அந்த கார் அருகில் உள்ள மரங்கள் நிறைந்த மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. காரின் அருகில் துஷார் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரை கொலை செய்தது யார்? எதற்காக இந்த கொலை நடந்தது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள். பணத்துக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்