உலக செய்திகள்

பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் இந்திய சினிமா ஒளிபரப்ப தடை

பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் இந்திய சினிமா ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய விமானப்படைகள் பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தன. இதை தொடர்ந்து இரு நாட்டுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்தது. அப்போது பாகிஸ்தான் தகவல் தொடர்பு துறை மந்திரி சவுத்ரி பாவத் உசேன், இந்திய சினிமாவை பாகிஸ்தான் மக்களும், சினிமா துறையும் புறக்கணிக்க வேண்டும், மேலும் இந்திய தயாரிப்பு விளம்பரங்களையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கூறினார்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில், பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சிகளில் இந்திய சினிமாவையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்