கோப்புப்படம் 
உலக செய்திகள்

இலங்கையில் 3 புதிய மின் உற்பத்தி நிலையங்கள்: இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம்

இலங்கை தீவுகளில் மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்திய நிறுவனம் பெற்றுள்ளது.

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெல்ப்ட் தீவு, நயினாதீவு மற்றும் அனலத்தீவு ஆகிய இடங்களில் புதிதாக 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் இந்தியாவின் மானிய உதவியுடன் அமைக்கப்படுகின்றன. இந்த நிலையில் புதிய மின்உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் நடந்த மந்திரிசபை கூட்டத்தில், ஹைபிரிட் மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை U Solar Clean Energy Solutions (Pvt) Ltd நிறுவனத்திற்கு வழங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக மந்திரிசபை செய்தி தொடர்பாளரும், ஊடகத்துறை மந்திரியுமான பந்துல குணவர்தனே தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து