Photo Credit: AP 
உலக செய்திகள்

இந்திய நண்பர்கள் பாதுகாப்பான கைகளில் உள்ளனர்; ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரான் கருத்து

ஹார்முஸ் நீரிணையின் எதிர்காலத்தை ஈரான் மற்றும் ஓமன் மட்டுமே தீர்மானிக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹார்முஸ் ஜலசந்தியை மூடி ஈரான் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. 5 வாரங்களாக நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியா, சீனா உள்ளிட்ட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹார்முசை கடக்க ஈரான் அனுமதியளித் துள்ளது. மேலும் அங்கு சிக்கியுள்ள இந்திய கப்பல்களுக்கு அனுமதி கேட்டு ஈரானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்திதொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "கியாஸ் மற்றும் கச்சா எண்ணெய் பாரத்து டன் ஹார்முஸ் நீரிணையை கடந்து 6 கப்பல்கள் இந்தியா வந்த டைந்துள்ளன. மேலும் 18 கப்பல்கள் ஹார்முசை கடக்க காத்தி ருக்கின்றன. அவை பாதுகாப்பாக கடக்க ஈரான் உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், மேலும் இங்கி லாந்து முன்னெடுத்துள்ள 35 நாடுகள் கூட்டமைப்பிலும் இந் தியா பேசி வருகிறது" என்றார்.

இந்த நிலையில், இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடக்கலாம் என்ற ரீதியில் ஈரான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் கூறுகையில், எங்கள் இந்திய நண்பர்கள் பாதுகாப்பான கைகளில் உள்ளனர், எந்தக் கவலையும் இல்லை”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள ஈரான் தூதரகத்தின் ட்வீட்டை மேற்கோள் காட்டி இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் இந்த தகவலை பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் கூறியிருப்ப்டதாவது: ஹார்முஸ் நீரிணையின் இறையாண்மை கட்டுப்பாடு ஈரான் மற்றும் ஓமன் நாடுகளுக்கே சொந்தமானது “ஹார்முஸ் நீரிணையின் எதிர்காலத்தை ஈரான் மற்றும் ஓமன் மட்டுமே தீர்மானிக்கும். நீங்கள் பாதுகாப்பான கைகளில் உள்ளீர்கள், கவலைப்பட தேவையில்லை” என்று கூறப்பட்டுள்ளது. .