கிகாலி,
ருவாண்டா நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் முதல்முறையாக ஒரு நபருக்கு உறுதியாகி உள்ளது. அவர் ஒரு இந்தியர்.
அந்நாட்டின் சுகாதார அமைச்சகம், கடந்த 8-ந் தேதி இந்தியாவின் மும்பையில் இருந்துவந்த இந்தியருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது. அவர் இங்கு வரும்போது அறிகுறி இல்லை. ஆனால் நேற்று முன்தினம் அவர் காய்ச்சலால் சிகிச்சைக்கு சென்றபோது பரிசோதனை செய்ததில் வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது, அவர் நலமாக உள்ளார் என்று கூறியுள்ளது.