உலக செய்திகள்

இங்கிலாந்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் - இந்திய வம்சாவளி நபருக்கு 22 ஆண்டுகள் சிறை

13 வயது சிறுமியை விருஜ் பட்டேல் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்திருந்தது தெரியவந்தது.

தினத்தந்தி

லண்டன்,

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் விருஜ் பட்டேல் (வயது 26). இவருடைய தம்பி கிஷன் படேல் (23). இருவரும் இங்கிலாந்தின் லண்டன் நகரில் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் விருஜ் படேல் தனது செல்போனில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் வைத்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விருஜ் படேலை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவருடைய செல்போனை சோதித்தபோது 13 வயது சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்திருந்தது தெரியவந்தது. மேலும் பல சிறுமிகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்த நிலையில், அது தொடர்பான வீடியோக்களும் அவரது செல்போனில் இருந்துள்ளன.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். விசாரணை முடிவில் விருஜ் படேலுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவருக்கு துணையாக இருந்ததற்காக கிஷன் படேலுக்கு 15 மாதங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து