உலக செய்திகள்

ஐக்கிய அரபுகள் நாட்டின் பல்கலைகழகத்தில் இந்திய மாணவர் தற்கொலை

ஐக்கிய அரபுகள் நாட்டின் பல்கலைகழகத்தில் இந்திய மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துபாய்

ஐக்கிய அரபுகள் நாட்டின் பல்கலைகழக மாடி கட்டிடத்திலிருந்து குதித்து 19 வயதுமிக்க இந்திய மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என அந்நாட்டின் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

முர்டோச் பல்கலைகழகத்தின் ஐந்தாம் மாடி கட்டிடத்திலிருந்து குதித்த மாணவன்,இரத்தக்குழாயில் அடிப்பட்டு இறந்து விட்டதாக துபாய் போலீசார் தெரிவித்தனர்.

மாணவனின் தற்கொலை குறித்து அவரது நண்பர் கூறுகையில்,பல்கலைகழகத்திற்கு தன் தந்தையோடு கட்டணம் செலுத்த வந்த தன் நண்பன்,அவரிடம் ஓய்வு அறைக்கு செல்வதாக கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறினான்.

இந்நிலையில் மாணவனின் தற்கொலைக் குறித்து துபாய் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.