கனடாவில் டான்வுட்ஸ் பகுதியில் பல்விந்தர் சிங் (வயது 27) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2009-ல் இந்தியாவில் இருந்து சென்று கனடாவில் குடியேறி டிரக் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில் டான்வுட்ஸ் சாலையில் அவரது வீட்டு வாசலில் மர்ம நபர்கள் 4 பேர் பல்விந்தர் சிங்கை சரமாறியாக சுட்டுக்கொன்றுவிட்டு தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பேர் சரணடைந்துள்ளதாக கனடா போலீசார் தெரிவித்துள்ளனர்.