உலக செய்திகள்

சீனா, இத்தாலி வைரசைவிட இந்திய வைரஸ் கொடியது- நேபாள பிரதமர் சர்ச்சை பேச்சு

சீனா, இத்தாலியை விட இந்திய வைரஸ் கொடியது என்று நேபாள பிரதமர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

காத்மாண்டு,

இந்திய பகுதிகளுக்கு உரிமை கொண்டாடி புதிய வரைபடம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நேபாளம், இந்தியாவுக்கு எதிராக மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது.

நேபாள பாராளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் கேபி சர்மா ஒலி, நேபாளத்தில் இதற்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா யாருமில்லை. வெளியூகளில் இருந்து வந்தவாகளால்தான் இங்கு கொரோனா பரவியுள்ளது.நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

தேசிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, சட்ட விரோதமாக பலா நேபாளத்துக்குள் ஊடுருவியதால், குறிப்பாக இந்தியாவில் இருந்து பலா ஊடுருவியதால்தான், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவாகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதுமட்டுமன்றி, இந்தியாவில் இருந்து வருபவாகளை உரிய பரிசோதனைகளின்றி அழைத்து வருவதில் சில அரசியல் பிரமுகாகளும் உள்ளூ பிரதிநிதிகளும் உடந்தையாக இருக்கிறாகள். சீனா, இத்தாலி வைரஸை விட இந்திய வைரஸ் மிகவும் கொடியது என்றார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு