Image Courtesy: AFP 
உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு ஒருங்கிணைப்பாளராக இந்தியர் நியமனம்

அமெரிக்காவில் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினர் பலர் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினர் பலர் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.

அந்த வகையில் அமெரிக்காவின் கொரோனா தடுப்பு ஒருங்கிணைப்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ஆஷிஷ் ஜா (வயது 51) என்பவரை ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ளார்.

தற்போது பிரவுன் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார துறையின் முதல்வராக இருந்து வரும் ஆஷிஷ் ஜா, அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதி கொரோனா தடுப்பு ஒருங்கிணைப்பாளராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.