உலக செய்திகள்

இங்கிலாந்தில் கோழிகளுக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள்

இங்கிலாந்தில் கோழிகளுக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தியதாக இந்தியர்கள் இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

லண்டன்,

நெதர்லாந்தில் இருந்து இங்கிலாந்துக்கு கப்பலில் கொண்டுவரப்பட்ட கோழிகளுக்குள் போதைப்பொருள் கடத்தி வந்தது கடந்த 2016-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு வரை அடிக்கடி இவ்வாறு கடத்தப்பட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்த இங்கிலாந்து அதிகாரிகள், இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அதன் முடிவில் இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இங்கிலாந்தில் வசித்து வந்த மஞ்சிந்தர் சிங், தேவேந்தர் சிங் ஆகிய இந்திய சகோதரர்கள் இருவரை அவர்கள் கைது செய்தனர். இவர்கள் மீது இங்கிலாந்து தேசிய குற்றவியல் முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பின்னர் இது தொடர்பாக பிர்மிங்காம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, மஞ்சிந்தர் சிங், தேவேந்தர் சிங் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் அவர்கள் இருவருக்குமான தண்டனை விவரம் வருகிற ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு