உலக செய்திகள்

இங்கிலாந்தில் நண்பரை கொலை செய்த இந்தியருக்கு வாழ்நாள் சிறை

இங்கிலாந்தில் நண்பரை கொலை செய்த இந்தியருக்கு வாழ்நாள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

தினத்தந்தி

லண்டன்,

இங்கிலாந்தின் கிழக்கு பகுதியில் உள்ள லீசெஸ்டர் நகரை சேர்ந்தவர் சுலாகான் சிங் (வயது 39). இவரது நண்பர் சுக்விந்தர் சிங். இவர்கள் இருவரும் அங்குள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர்.

கடந்த ஜூலை மாதம் 2-ந்தேதி பணியில் இருந்தபோது இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுலாகான் சிங் கூர்மையான ஆயுதத்தால் சுக்விந்தர் சிங்கை குத்தி கொலை செய்தார்.

அதனை தொடர்ந்து, சுலாகான் சிங்கை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு லீசெஸ்டர் நகர கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் சுலாகான் சிங் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து இந்த வழக்கில் அவரை குற்றவாளியாக அறிவித்த நீதிபதி அவருக்கு வாழ்நாள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்