உலக செய்திகள்

அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக முட்டி மோதும் இந்தியர்கள்

அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் முட்டி மோதுவதாக தகவல் கிடைத்துள்ளது.

வாஷிங்டன்

அதிபர் ட்ரம்பின், வெளிநாட்டவர் குடியேற்றக் கொள்கை குறித்த நிச்சயமற்ற தன்மை, இந்த ஆண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தல் ஆகியவற்றின் காரணமாக அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக லட்சக்கணக்கானோர் முட்டி மோதுவதாக தகவல் கிடைத்துள்ளது.

அமெரிக்க குடியுரிமையை பெறுவது அங்கு பணியாற்றும் ஏராளமான அயல் நாட்டவரின் கனவாக உள்ளது. 2019 ஆம் நிதியாண்டில் (2019 செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த 12 மாத காலம்), விண்ணப்பித்தவர்களில் 8 லட்சத்து 34 ஆயிரம் பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்த எண்ணிக்கை ஆகும். முந்தைய ஆண்டை விட 9.5 சதவீதம் உயர்வு என அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைத் துறை தெரிவித்துள்ளது.

இது தவிர 5 லட்சத்து 77ஆயிரம் பேருக்கு அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான சட்டபூர்வ கிரீன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 59 ஆயிரத்து 281 பேருடன் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்தியர்கள் 52 ஆயிரத்து 194 பேருக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்துள்ளது. முதல் இடத்தில் மெக்சிகோவும் (1.3 லட்சம்), சீனர்கள் (69,600) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...