உலக செய்திகள்

இந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டம் தேவையற்றது - ஷேக் ஹசீனா

இந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டம் தேவையற்றது என வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறி உள்ளார்.

அபுதாபி

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்கள், சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள். அவர்கள் இந்தியாவில் குடியேறி 5 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்ற குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள், அரசியல் கட்சிகள், முஸ்லிம் இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்குவங்காளம், பஞ்சாப், கேரளா போன்ற மாநிலங்கள் இந்த சட்டத்தை எதிர்க்கின்றன.

இந்த நிலையில் இந்தியாவின் இந்த புதிய குடியுரிமைச் சட்டம் தேவையற்றது என வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

ஷேக் ஹசீனா அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது;-

தேசிய குடிமக்களின் பதிவு (என்.ஆர்.சி) இந்தியாவின் உள் விஷயம், அது தனது மக்களை பாதிக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் உறுதியளித்து உள்ளார்.இந்திய அரசு அந்த சட்டத்தை ஏன் கொண்டுவந்தது என்று எங்களுக்கு புரியவில்லை.அது தேவையற்றது.

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவு ஆகியவை இந்தியாவின் உள் விவகாரம் என்று வங்காள தேசம் எப்போதும் பேணி வருகிறது. என்.ஆர்.சி. இந்தியாவின் உள் விவகாரம் என்று இந்திய அரசு மீண்டும் மீண்டும் கூறி வருகிறது, மேலும் 2019 அக்டோபரில் நான் புதுடெல்லிக்குச் சென்றபோது பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் எனக்கு உறுதியளித்து இருந்தார் என கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு