உலக செய்திகள்

இந்தோனேசியாவில் 6.7 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியா ஜகார்த்தா அருகே 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வெளியேறினர்.

தினத்தந்தி

ஜகார்த்தா

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே 6.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, கட்டிடங்கள் அதிர்ந்ததால் பீதியடைந்த மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறி ரோட்டில் கூடினர்.

இந்தோனேசியாவின் வானிலை ஆய்வு மையம் நிலநடுக்கம் பான்டென் மாகாணத்திலிருந்து 32 மைல் தொலைவில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் . ஆனால் சுனாமியை ஏற்படும் வாய்ப்பு இல்லை என்றும் கூறி உள்ளது.

இந்த நிலநடுக்கம் மேற்கு ஜாவா மாகாணத்திலும் சுமத்ரா தீவில் உள்ள லாம்புங்கிலும் உணரப்பட்டது.

இந்தோனேசியா "பசிபிக் ரிங் ஆப் பயர்" என்று அழைக்கப்படும் நில நடுக்க மண்டலத்தில் உள்ளது. இதனால் அதிக எண்ணிக்கையிலான நடுக்கம் அடிக்கடி ஏற்படும்.

கடந்த மாதம், 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கிழக்கு இந்தோனேசியாவைத் தாக்கியது, சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது .

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை