உலக செய்திகள்

இந்தோனேசியா: கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு - 9 பேர் பலி

இந்தோனேசியாவில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி

ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் ஜாவா தீவின் மேற்குபகுதியில் உள்ள சுகாபுமி மாவட்டத்தில் நேற்று இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. மழை, வெள்ளத்தை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

சிர்னாரேஸ்மி என்கிற கிராமத்தில் 30 வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகினர். 34 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. எனவே பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவவீரர்கள், போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது