உலக செய்திகள்

கழிவு எண்ணெய் எடுத்துச்சென்ற எண்ணெய் கப்பல்: அதிரடியாக கைப்பற்றியது இந்தோனேசியா

சட்ட விரோதமாக கழிவு எண்ணெய் எடுத்துச்சென்ற எண்ணெய் கப்பலை இந்தோனேசியா அதிரடியாக கைப்பற்றி உள்ளது.

தினத்தந்தி

ஜகார்த்தா,

இந்தோனேசிய தீவுக்கூட்டத்தின் வடமேற்கு முனையில் (சிங்கப்பூர் அருகே) படாமில் உள்ள கடற்படை தளத்துக்கு அருகே சுமார் 22 கி.மீ. தொலைவில் நேற்று முன்தினம் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு எண்ணெய் கப்பல் வந்து கொண்டிருப்பதாக இந்தோனேசிய கடற்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த கடற்படையினர் அந்த கப்பலை அதிரடியாக கைப்பற்றினர்.

இந்த கப்பல் பனாமா நாட்டின் கொடியேந்தியதாகும். இதன் பெயர், எம்.டி. ஜோடியாக் ஸ்டார். இதில் இந்தோனேசிய சிப்பந்திகள் 18 பேர் இருந்தனர். ஒரு மலேசிய சிப்பந்தியும் இருந்தார். இந்த எண்ணெய் கப்பல் 4,600 டன் கழிவு எண்ணெய்யுடன், துறைமுக அனுமதியோ, பிற முறையான சட்ட ஆவணங்களோ இன்றி சட்டவிரோதமாக வந்து கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக புலனாய்வு அதிகாரிகள், நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், எண்ணெய் கப்பல் கேப்டனிடம் விசாரணை நடத்துவதாகவும் இந்தோனேசிய கடற்படை தளபதி ரியர் அட்மிரல் அர்ஸ்யாத் அப்துல்லா தெரிவித்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு