உலக செய்திகள்

இத்தாலியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,07,428 ஆக அதிகரிப்பு

இத்தாலியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,07,428 ஆக அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

ரோம்,

உலக அளவில் கொரோனா வைரஸ் தெற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 2,40,338 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் 210 நாடுகளில் மொத்தம் 34,22,595 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10,93,215 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான இத்தாலியில் மார்ச் மாதத் தொடக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மார்ச் 9-ல் நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கப்பட்டது.

பின்னர் கொரோனா வைரசின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில், மே 4-ம் தேதி முதல் அங்கு பொது ஊரடங்கு மெல்ல மெல்ல நீக்கப்பட உள்ளது. இதனால் ஜூன் மாதம் முதல் இத்தாலியில் இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 2,07,428 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 28,236 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசின் தாக்குதலில் இருந்து இதுவரை 78,249 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை