உலக செய்திகள்

வங்க தேசத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

வங்க தேசத்தில் இன்று பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.

தினத்தந்தி

டாக்கா,

வங்க தேசத்தில் நாடு முழுவதும் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. முதல் மாதத்தில் சுமார் 35 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வங்க தேச அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள இதுவரை 3,28,000 பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் 3 கோடி கொரோனா தடுப்பூசிகளை பெற வங்க தேச அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் முதற்கட்டமாக தற்போது 50 லட்சம் தடுப்பூசிகள் வங்க தேசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் 20 லட்சம் தடுப்பூசிகள் இந்திய அரசு சார்பில் வங்க தேசத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

வங்க தேசத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் சாஹித் மாலிக் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். பின்னர் பேசிய அவர் இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்தது என்று தெரிவித்தார். தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் வதந்திகளை நம்பாமல் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்