உலக செய்திகள்

சீனாவில் கொரோனாவை தடுக்க மூக்கு வழியாக செலுத்தும் ‘ஸ்பிரே’ தடுப்பூசி - மருத்துவ பரிசோதனைக்கு ஒப்புதல்

சீனாவில் கொரோனாவை தடுக்க மூக்கு வழியாக செலுத்தும் ‘ஸ்பிரே’ தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஒப்புதல் கிடைத்துள்ளது.

தினத்தந்தி

பீஜிங்,

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்காக முதன் முதலாக மூக்கு வழியாக ஸ்பிரே செய்யக்கூடிய தடுப்பூசி மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் பல்கலைக்கழகம், ஜியாமென் பல்கலைக்கழகம், பீஜிங் வாண்டாய் உயிரியல் மருந்தகம் ஆகியவற்றின் கூட்டு தயாரிப்பு இது.

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு சீன தேசிய மருத்துவ தயாரிப்புகள் கழகம் தனது ஒப்புதலை அளித்துள்ளது.

இந்த மருத்துவ பரிசோதனை நவம்பர் மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் 100 பேருக்கு மூக்கு வழியாக ஸ்பிரே செய்து அதன் விளைவுகள் ஆராயப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு