உலக செய்திகள்

உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி இன்ஸ்டாகிராம்

உலகிலேயே அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற பெருமையை ‘இன்ஸ்டாகிராம்’ பெற்றுள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

உலகம் முழுவதும் சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் வலைதளம் ( முன்பு டுவிட்டர்), வாட்ஸ்அப் போன்றவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில், தங்களுடைய புகைப்படங்கள், வீடியோக்கள் உள்பட பல்வேறு தகவல்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில், உலகளவில் கடந்த ஆண்டு அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டிக்-டாக்கை பின்னுக்கு தள்ளி இன்ஸ்டாகிராம் முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராம் பதிவிறக்கம் 2023ல் 20 சதவீதம் அதிகரித்ததாகவும், மொத்தமாக 767 மில்லியன் முறை இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவும் சந்தை நுண்ணறிவு நிறுவனம் சென்சார் டவர் தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்மூலம், உலகிலேயே அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற பெருமையை 'இன்ஸ்டாகிராம்' பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராம் செயலி 767 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட நிலையில், டிக்டாக் 733 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராமின் இந்த அபார வளர்ச்சிக்கு அதன் ரீல்ஸ் அம்சம் முக்கிய காரணமாக உள்ளதாக கருதப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் கடந்த சில ஆண்டுகளாக டிக்டாக்கைத் மிஞ்சும் வகையில் அதிகமாக வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. அதன் ரீல்ஸ் அம்சம் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது என்று சென்சார் டவரின் மூத்த நுண்ணறிவு மேலாளர் ஆபிரகாம் யூசெப் கூறியுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்